இலங்கை கல்வி துறையில் ஏற்படவுள்ள மாற்றம் – 21 வயதில் பட்டம் பெறலாம்

இலங்கையில் உத்தேச கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு வருகின்றது.
இந்நாட்டின் பிள்ளைகள் 18 வயதிலேயே பல்கலைக்கழகம் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று கல்வி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உத்தேச கல்வி சீர்திருத்தங்களின் படி, இந்நாட்டு மாணவர்கள் 21 வயதிற்குள் பல்கலைக்கழக பட்டம் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றார்.
க.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளிலும் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
(Visited 13 times, 1 visits today)