பிரான்ஸில் ஏற்பட்டுள்ள மாற்றம் – குறைவடைந்த கொலைகள்
பிரான்ஸில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடையே இடம்பெறும் படுகொலைகள் குறைவடைந்துள்ளது.
கடந்தவருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் வீழ்ச்சியடைந்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையின் கூடாரமாக விளங்கும் மார்செ நகரிலேயே இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வருடத்தின் முதல் ஆறு மாதத்தில் மார்செயில் 5 பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.
அனைத்து கொலைகளும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகும்.
அதேவேளை, சென்ற வருடம் முதல் ஆறு மாதங்களில் 23 பேர் கொல்லப்பட்டிருந்தனர். அதனோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் 70% சதவீத வீழ்ச்சியாகும்
அதேவேளை, கொலை முயற்சியும் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த ஆறு மாதத்தில் 19 முயற்சிகளும், சென்ற ஆண்டு முதல் ஆறு மாதங்களில் 46 முயற்சிகளும் பதிவாகியிருந்தன.
(Visited 2 times, 1 visits today)