இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக குற்றஞ்சாட்டுவதில் ஆஸ்திரேலிய பொலிஸ் அதிகாரிகள் காரணமின்றி செயற்பட்டதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதனால், தனுஷ்க குணதிலக்க வழக்குக்காக செலவழிக்கப்பட்ட பணம் முழுவதையும் மீட்க வாய்ப்பு கிடைக்கும்.
தனுஷ்க குணதிலவுக்கு எழுத்துமூல அனுமதி வழங்குமாறு சிட்னி நீதிமன்றம் பொலிஸ் அதிகாரிகளுக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியின் போது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் தனுஷ்க குணதிலக்க சில வாரங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பான குற்றச்சாட்டை பதிவு செய்வதற்கு முன்னர் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் எந்தவொரு உண்மைகளையும் ஆராயவில்லை என இன்று நீதிமன்றில் தெரியவந்துள்ளது.
(Visited 11 times, 1 visits today)





