அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் இறப்பை சரியாக கணித்த பூனை!
அமெரிக்காவில் பூனையொன்று நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் இறப்புகளை வினோதமாக கணித்து வைரலாகி வருகிறது.
குறித்த பூனையானது இறப்புகளை முன்கூட்டிய கணிப்பதன் மூலம் அவர்களின் இறுதி நாட்களில் குறித்த நபருடன் தங்கி நேரத்தை செலவழித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள பிராவிடன்ஸில் உள்ள ஸ்டீயர் ஹவுஸ் நர்சிங் மற்றும் மறுவாழ்வு மையத்தால் இந்தபூனை தத்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆஸ்கர் என்று பெயர்வைத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பூனையானது, மறுவாழ்வு மையத்தில் உள்ள ஒருவரிடம் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளது. பின்னர் சிறிது நாட்களிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறாக நுற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் அவ் பூனையானது நெருக்கமாக பழகிவர அவர்கள் அடுத்த சிறிது நாட்களில் உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் இறப்பை சரியாக கணித்த குறித்த பூனையானது கடந்த 2022 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவையொருப்புறம் இருக்க விலங்குகளால் மனிதர்களின் மரணத்தை கணிக்க முடியுமா என்பது தொடர்பில் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
உண்மையில் விலங்குகளால் மனிதர்களுக்கு புற்றுநோய் இருப்பதை கூட எளிதாக கணிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
அதாவது மனிதர்களிடம் ஏதேனும் நோய் ஏற்படும் பொழுது அவர்களிடம் சுரக்கும் ஹோர்மோன்களை வைத்து விலங்குகள் இலகுவாக அடையாளம் காண்பதாக ஆய்வு நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.