தென் கொரியாவில் திடீரென பாதசாரிகள் மீது மோதிய கார் – 9 பேர் உயிரிழப்பு
தென் கொரியத் தலைநகர் சோலில் பாதசாரிகள் மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழந்த நிலையில் நால்வர் காயமடைந்தனர்.
காரை முன்னோக்கிச் செலுத்தும் விசையை ஓட்டுநர் எதிர்பாராமல் முடுக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார் தவறான திசையில் ஓட்டிச் செல்லப்பட்டதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
சாலையைக் கடக்கும் சமிக்ஞைக்காகப் பாதசாரிகள் காத்திருந்தபோது அவர்கள் மீது கார் மோதியது.
அதற்கு முன் வேறு இரண்டு வாகனங்கள் மீது அந்தக் கார் மோதியதாகத் தெரிகிறது.
அதன் தொடர்பில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.





