சீனாவில் விளையாட்டு மைதானத்தில் நுழைந்த கார் : உடற்பயிற்சி செய்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை!
சீனாவின் ஜுஹாய் விளையாட்டு மையத்திற்கு வெளியே கார் ஒன்று அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர்.
விபத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் நடுத்தர வயது மற்றும் முதியவர்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது சம்பந்தமான காணொளி தற்போது வைரலாகி வருகின்ற நிலையில், காரின் உரிமையாளரை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





