ஐரோப்பா

சுவிஸில் திரையில் ஆபாச வீடியோவுடன் சாலைகளில் வலம் வந்த வாகனம்!

சுவிஸ் சாலைகளில் ஆபாச வீடியோவை ஓடவிட்டபடி வலம் வந்த வாகனம் ஒன்று சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

ஜெனீவாவில், வாகனம் ஒன்றின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்ட திரைகளில் ஆபாச வீடியோ ஓடியதால், பொலிஸார் அந்த வாகனத்தைக் கைப்பற்றினார்கள். விசாரணையில், அது பாலியல் நிறுவனம் ஒன்றிற்கான விளம்பரம் என தெரியவந்தது.

அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டார். அவர் அந்த விளம்பரத்தை கலையம்சத்துடன் பார்க்கவேண்டும் என்றும் அது ஆபாசம் அல்ல என்றும் வாதிட்டார்.

தங்கள் நிறுவனத்துக்காக சுவர்களில் விளம்பரம் செய்ய யாரும் அனுமதி தரவில்லை என அந்த நிறுவனம் புகாரும் கூறியது.

ஆனாலும், சிறு பிள்ளைகள் அந்த ஆபாசப்படங்களைக் காண அந்த விளம்பரம் வழிவகை செய்ததாகவும், வாகனங்களில் செல்வோரின் கவனத்தை திசை திருப்பி போக்குவரத்துக்கு தொந்தரவாக இருந்ததாகவும் கூறி, அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு 5,600 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்

(Visited 14 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்