மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கனடிய பெண் ஒருவர் பலி!

மெக்ஸிக்கோவில் இடமபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கனடிய பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மெக்ஸிக்கோவின் குவார்டாரோ நகரில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கெப்ரியல் சாசெட் என்ற பெண்ணே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கெப்ரியல் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் கடைக்குச் சென்றிருந்த போது அவர்களது உடமைகளை தருமாறு அச்சுறுத்தப்பட்டுள்ளது.சில நபர்களினால் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மெக்ஸிக்கோவில் கனடிய பெண் ஒருவர் கொல்லப்பட்டதனை கனடிய வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
(Visited 33 times, 1 visits today)