வீடு ஒன்றிலிருந்து உதவி கோரி வந்த அழைப்பு… விரைந்த உதவிக்குழுவினருக்கு நேர்ந்த கதி!
ஜேர்மனியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து அவசர உதவி கோரி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, பொலிஸாரும் தீயணைப்புக் குழுவினரும் அங்கு விரைந்தனர்.
மேற்கு ஜேர்மனியிலுள்ள Ratingen என்னும் நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து அவசர உதவி கோரி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, பொலிஸாரும் தீயணைப்புக் குழுவினரும் அங்கு விரைந்தனர்.
திறந்திருந்த அந்த வீட்டின் அருகே பொலிஸார் செல்லவும், அந்த வீட்டுக்குள்ளிருந்து ஏதோ வெடிக்கவும் சரியாக இருந்துள்ளது. அந்த வெடி விபத்தில், இரண்டு பொலிஸாரும் 10 தீயணைப்பு வீரர்களும் காயமடைந்துள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக North Rhine-Westphalia மாகாண உள்துறை அமைச்சரான Herbert Reul தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஏதோ வெடித்து அவசர உதவிக்குழுவினர் பலர் காயமடைந்த நிலையிலும், வெடி விபத்தை ஏற்படுத்திய நபர், வீட்டின் கதவை மூடிவிட்டு, உள்ளே சென்று வீட்டை பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொளுத்தியுள்ளார்.
வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த பொலிஸார், அந்த 57 வயது நபரைக் கைது செய்துள்ளனர். மேலும், வீட்டை சோதனையிடும்போது, வீட்டுக்குள் பெண் ஒருவரின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்தப் பெண், கைது செய்யப்பட்ட அந்த நபரின் தாயாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
எதனால் அந்த நபர் வெடி விபத்தை ஏற்படுத்தினார், அந்தப் பெண் யார் என்பது போன்ற எந்த விவரமும் தெரியாத நிலையில், கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். அவசர உதவி அழைப்பை ஏற்று உதவச் சென்ற பொலிஸாரும் தீயணைப்பு வீரர்களும் வெடிவிபத்தில் காயமடைந்த சம்பவம் ஜேர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.