கெஹேல்பத்தர பத்மேவிடமிருந்து துப்பாக்கி வாங்கிய வியாபாரியொருவர் கைது
பாதாள குழு உறுப்பினர் கெஹேல்பத்தர பத்மேவிடமிருந்து துப்பாக்கியொன்றை வாங்கினார் எனக் கூறப்படும் வியாபாரியொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவரே, மேல்மாகாண குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த வியாபாரியின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது துப்பாக்கியும், தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
துப்பாக்கியை வாங்குவதற்காக வியாபாரி, மூன்றரை லட்சம் ரூபாவை வழங்கியுள்ளார் என தெரியவருகின்றது. அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
(Visited 3 times, 3 visits today)





