உக்ரைன் போர் களத்தில் பிரித்தானிய வீரர் ஒருவர் உயிரிழப்பு!
உக்ரைனில் பணியில் இருந்த பிரித்தானிய இராணுவ வீரர் ஒருவர் கடந்த ஒன்பதாம் திகதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராசூட் படைப்பிரிவைச் சேர்ந்த லான்ஸ் கார்போரல் ஜார்ஜ் ஹூலி (Lance Corporal George Hooley) என்ற 28 வயதுடைய வீரர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் இராணுவம் புதிய ஆயுதத்தை சோதனை செய்துகொண்டிருந்தபோது, நடந்த “துரதிர்ஷ்டவசமான விபத்தில்” அவர் உயிரிழந்ததாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக ஹூலியின் துணிச்சலையும், நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவையையும் எடுத்துரைத்த பிரித்தானிய பிரதமர் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சகம் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளது.





