ஸ்பெய்ன் கடற்கரைக்கு நாயுடன் உலா வந்த பிரித்தானியர் உயிரிழப்பு!

ஸ்பெயினில் தனது நாயுடன் கடற்கரையில் உலா வந்த பிரித்தானிய பிரஜை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Punta Umbriaவில் உள்ள லாஸ் எனப்ரேல்ஸ் கடற்கரைக்கு வருகை தந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
40 வயது மதிக்கத்தக்க அவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவசர சேவைகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்ற மருத்துவர்கள் உள்ளிட்ட குழுவினர் அவரை காப்பாற்ற போராடியதாக கூறப்படுகிறது.
அவர் யார் என்பதை அடையாளம் காண பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
(Visited 25 times, 1 visits today)