காலிஸ்தான் ஆதரவாளருக்கு 28 மாதம் சிறைத் தண்டனை விதித்த பிரித்தானிய நீதிமன்றம்
பிரித்தானியாவில் காலிஸ்தான் ஆதரவாளருக்கு 28 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பிரித்தானிய தலைநகர் லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள சவுத்ஹாலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி இந்திய சுதந்திர தினத்தில் நடந்த விழாவில் இந்திய வம்சாவளியினர் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது ஆஷிஷ் சர்மா மற்றும் நானக் சிங் என்ற இரண்டு இந்திய வம்சாவளியினரை காலிஸ்தான் ஆதரவாளரான குர்பிரித் சிங் என்பவர் தாக்கியதாக புகார் எழுப்பப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து குர்பிரித்சிங்கை பிரித்தானிய பொலிஸார் கைது செய்து, ஜல்வர்த் கிரவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.இந்நிலையில் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பிரித் சிங்கிற்கு 28 மாதங்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.