கென்யாவில் உணவகம் ஒன்றில் வெடித்த வெடிகுண்டு – பொலிஸ் அதிகாரி உட்பட நால்வர் பலி!

வடகிழக்கு கென்யாவில் உள்ள மண்டேரா நகரில் உள்ள பொலிஸ் நிலையம் அருகே ஒரு உணவகம் உள்ளது. அந்த உணவகத்தில் நேற்று காலை திடீரென வெடிகுண்டு வெடித்தது. இந்த விபத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த பொலிஸார் வெடிகுண்டு வெடித்தது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மண்டேரா பொலிஸ் தலைமை அதிகாரி சாம்வெல் தெரிவித்துள்ளார்.
(Visited 14 times, 1 visits today)