நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் இரத்து! சட்டமூலம் முன்வைப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவால் Harshana Nanayakkara மேற்படி சட்டமூலம் இன்று முன்வைக்கப்பட்டது.
1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்குரிய சட்டமூலத்துக்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கி இருந்தது.
இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தில் முதலாவம் வாசிப்புக்கென இன்று முன்வைக்கப்பட்டது.
மேற்படி சட்டமூலத்துக்கு எவரேனும் எதிர்ப்பெனில் உயர்நீதிமன்றத்தை நாடலாம்.
உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானம் வெளியான பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை இடம்பெறும்.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்குரிய சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





