கூகுள் தேடுதளத்தின் மீது சரமாரி குற்றச்சாட்டு!
கூகுள் தேடுதளம் போலியான வழியில் தன்னுடைய தேடுதளத்தை மக்களிடம் பிரபலப்படுத்தி இருப்பதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டி, வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
உலகத்தை தற்போது மிகச் சிறியதாக மாற்றி இருக்கிறது மென்பொருள்கள். மனிதர்களுக்கு எழக்கூடிய கேள்விகள், சந்தேகங்கள் என்று எல்லா வித கேள்விகளுக்குமான, பதில்களை அறிய மென்பொருளின் தேடுதளத்தையே நோக்கி மக்கள் முதலில் செல்கின்றனர். அதே சமயம் பல்வேறு வகையான மென்பொருள் நிறுவனங்கள் தேடுதள வசதியை செயல்படுத்தி வருகின்றன. ஆனால் முக்கிய தேடுதளமாக கூகுள் தேடுதளமே விளங்குகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அரசு கூகுள் நிறுவனம் தன்னுடைய தேடுதளத்தை பிரதான தளமாக இயக்குவதற்கு மென்பொருள் நிறுவனங்களுக்கும், தொலைபேசி நிறுவனங்களுக்கும் அதிக அளவிலான தொகைகளை முறையீடாக வழங்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. இதை அடுத்து அமெரிக்கவின் வாஷிங்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசின் சார்பில் கூகுள் நிறுவனத்தின் மீது முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணையில் அமெரிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தது, கூகுள் மென்பொருள் நிறுவனம் தன்னுடைய தேடுதளத்தை மக்களிடத்தில் போலியான வகையில் கொண்டு சென்று இருக்கிறது. பல நிறுவனங்கள் போட்டியில் இருந்தாலும் தன்னுடைய நிறுவனத்தை நோக்கி மக்களை வரவைப்பதற்காக ஆப்பிள் போன்ற பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இதுவரை 82,955 கோடி ரூபாய் முறை கோடாக செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் இது நியாயமான போட்டியாக இல்லாமல் தன்னுடைய ஏகபோக தனத்தை அரங்கேற்றுவதற்கான முறைகேடான போட்டியாக கூகுள் நிறுவனம் கையாண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு வகையான மென்பொருள் நிறுவனங்கள் அதிக அளவிலான வருவாய் இழப்பை சந்தித்து இருக்கின்றன. மேலும் கூகுள் தேடுதளம் தன்னுடைய முக்கியத்துவத்தை போலியான பின்பமாக கட்டமைத்து இருக்கிறது. இது சர்வதேச வளர்ச்சி சுருக்கி, ஒற்றை நிறுவனத்தை உள்ளடக்கியதாக மாறிவிடும். உலகில் பலதரப்பட்ட நிறுவனங்களினுடைய வளர்ச்சி இருந்தால் மட்டுமே நாடு முழுவதும் வளர்ச்சியை நோக்கி செல்லும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.