யாழில் இடம்பெற்ற விபத்தில் வங்கி முகாமையாளர் பலி
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி சமுர்த்தி வங்கியின் உதவி முகாமையாளர் ஒருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.
பத்மநாதன் ஐங்கரன் என்ற 50 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தார்.
தனது மகனை தனியார் வகுப்பில் இருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த வேளை , நேற்று பிறவுண் வீதியில் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகி
படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்தவரை , அங்கிருந்தவர்கள் மீட்டு , சிகிச்சைக்காக யாழ் , போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





