ஐரோப்பா

விபத்தில் பலியான 7 வயது சிறுமி.. 14 வயது சிறுவனை கைது செய்த பொலிஸார்!

பிரித்தானியாவில் 7 வயது சிறுமி விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததை தொடர்ந்து 14 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் வெஸ்ட் மிட்லாண்ட் பகுதியில் உள்ள வால்சால்(Walsall) சாலையில் 14 வயது சிறுவன் ஒருவர் 7 வயது சிறுமி மீது தன்னுடைய மோட்டார் பைக்-ஆல் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.

இதில் 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு இரவு 7 மணியளவில் விரைந்து சென்ற பொலிஸார் நிலைமையை ஆராய்ந்தனர்.அத்துடன் விபத்து ஏற்படுத்திய 14 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Boy, 14, arrested after seven-year-old girl dies in motorbike hit-and-run |  County Times

மேலும் விபத்து நடந்த மாதிரியை உருவாக்கும் முயற்சியில் சிறுவன் ஓட்டிச் சென்ற நீலம் மற்றும் கருப்பு நிறம் கொண்ட மோட்டார் பைக்கை பொலிஸார் தேடி வருகின்றனர்.இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு துப்பறிவாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வெஸ்ட் மிட்லாண்ட் பொலிஸ் அதிகாரி DS பால் ஹியூஸ் பேசிய போது, இது மிகவும் மோசமான நிகழ்வு இதன் விளைவாக அப்பாவி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

ஆனால் நாங்கள் இன்னும் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை தேடிக் கொண்டு இருக்கிறோம், எனக்கு தெரியும் இங்குள்ள உள்ளூர் மக்களுக்கு அந்த மோட்டார் சைக்கிள் எங்கு இருக்கும் என்று, எனக்கு தேவை எல்லாம் உள்ளூர் சமூகம் விசாரணைக்கு உதவ வேண்டும் என்பது தான்.

இது மக்களை பாதுகாப்பது பற்றியது அல்ல, சரியானவற்றை செய்வது பற்றியது என்று விசாரணை அதிகாரி பால் ஹியூஸ் தெரிவித்துள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்