இந்தியா

இந்தியாவில் பள்ளி இரும்புக்கதவு விழுந்து 6 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

ஹைதராபாத், ஹயாத் நகரில் உள்ள ஒரு பள்ளியில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயதுச் சிறுவன்மீது பள்ளியின் இரும்புக்கதவு விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தான்.

முதலாம் வகுப்பு மாணவனான அஜய் ‘எம்பிபி’ பள்ளியில் உள்ள இரும்புக் கம்பிக் கதவின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். சில குழந்தைகள் இரும்புக் கதவின் மேல் ஏறி அதை அங்கும் இங்கும் ஆட்டியுள்ளனர். சரியாகப் பொருத்தப்பட்டிராத கதவின் நாதாங்கி கழன்றதில், கதவு சிறுவன் மீது விழுந்தது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டது என்று காவல்துறை தெரிவித்தது.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது என்று இந்திய ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!