முல்லைத்தீவில் 41 வயது நபர் ஒருவர் அடித்து கொலை
முல்லைத்தீவு(Mullaitivu) ஒட்டுசுட்டான்(Ottusuddan) பிரதேசத்தின் கரடிப்புலவு(Karadipulavu) கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.
குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வசித்து வந்த 41 வயது நபர், கடைக்கு சென்று உணவு வாங்கி வந்து கொண்டிருந்த வேளையில் அவரது தலையின் பின்பகுதியில் தாக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த நபரின் உடல் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




