பிரித்தானியாவில் 200 ஆண்டுகள் பழைமையான தேவாலயம் மீண்டும் மக்களின் பார்வைக்கு
பிரித்தானியாவில் வர்த்தகக் கட்டடம் ஒன்றால் மறைக்கப்பட்டிருந்த தேவாலயத்தை முதல் முறையாக பாரக்க முடிந்துள்ளது.
200 ஆண்டுப் பழைமையான தேவாலயத்தை சுமார் 50 ஆண்டுகளில் முதல்முறையாக வீதியில் காண முடிந்துள்ளது.
House of Fraser என்ற அந்தக் கட்டடம் 1867ஆம் ஆண்டு Howells என்ற பெயரில் கார்டிஃப் நகரில் திறக்கப்பட்டது.
4 ஆண்டுகள் கழித்து அந்தக் கட்டடம் விரிவடைந்து Bethany Baptist தேவாலயத்தை மறைத்து விட்டது.
கார்டிஃப் நகரில் அதிகரித்த மக்கள்தொகையாலும் கட்டடங்களாலும் அந்தத் தேவாலயத்திற்குச் செல்வது கடினமாக மாறியுள்ளது. Howells சென்ற மார்ச் மாதம் மூடப்பட்டதை அடுத்து அங்குப் புதுப்பிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
கட்டடத்தின் ஒரு சுவர் இடிக்கப்பட்ட பின்னர் தேவாலயம் மீண்டும் மக்களின் பார்வைக்கு வந்தது. 100 மில்லியன் பவுண்ட் செலவில் கட்டடம் சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.