டெல்லியில்(Delhi) 20 வயது பெண் ஒருவர் காதலனால் கத்தியால் குத்திக் கொலை

வடகிழக்கு டெல்லியின் நந்த் நக்ரி(Nand Nagri) பகுதியில், 20 வயதுடைய பெண் ஒருவர், அவரது காதலனால் இன்று காலை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நந்த் நக்ரியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது.
குறித்த பெண் வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகம் கொண்டதால் காதலன் அந்தப் பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.சண்டையின் முடிவில் அவர் கத்தியால் பலமுறை தாக்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
விசாரணையில், குறித்த இளைஞரும் பெண்ணும் ஒரே பகுதியில் வசித்துவந்தவர்கள் என்றும், கடந்த நான்கு ஆண்டுகளாக அவர்களிடையே காதல் தொடர்பு இருந்தமையும் தெரியவந்துள்ளது.
அண்மையில் அந்தப் பெண் விலகிச் செல்ல ஆரம்பித்ததே இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணம் என காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.