17 வயது பெண்ணை அடித்து சித்திரவதை சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய கோரிக்கை
மதுராந்தகம் மே.20
செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த பா.பர்வீன், வயது 17, என்பவர் அதே பகுதியைச் சார்ந்த கருப்பன் மகன் ராஜா மற்றும்.
ராமதாஸ் ஆகியோருக்கும் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் வழக்கு A.S No.44/2016 நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மேற்குறிய சிவில் வழக்கை மறைத்து ராஜா என்பவர் பர்வீன் குடும்பத்தின் மீது ஆய்வாளர்,DCB செங்கல்பட்டுல் புகார் மனு கொடுத்து FIR பதிவு செய்யப்பட்டு ராஜா என்ப அம்மாவையும் பாட்டியையும் கைது செய்து பிறகு ஜாமினில் வெளியே வந்து விட்டனர்.
மேலும் பர்வீன் மீது பதியப்பட்ட FIR க்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கு எண் CRL.OP No . 9412/ 2023ல் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கூடாது என்று இடைக்கால உத்திரவு பெற்றுள்ளேன் மேலும் எங்கள் குடும்பத்தை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் (Not to Harass) எனும் வழக்கு தொடுத்து வழக்கு எண் CRL.OP No 11170/ 2023ல் எங்களுக்கு ஆதரவாக உத்தரவும் பெற்றுள்ளனர்.
பர்வீன் அம்மாவையும் பாட்டியையும் சிறையில் இருந்த சமயம் மேற்குறிய ராமதாஸின் தூண்டுதலின் படி ராஜா எங்கள் இடத்தில் அத்துமீறி நுழைந்து 17 வயதாகிற என்னை அசிங்கமான அருவருப்பான வார்த்தைகளால் திட்டி அடித்துள்ளனர்.
என்னை அடித்ததையும் கொலை மிரட்டல் விடுத்ததையும் செல் போனில் பதிவு செய்து வைத்து அதை ஆதாரமாக கொண்டு கடந்த 29.3.2023 அன்று படாளம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார் பர்வீன்.
மேலும் 17 வயதான என் மீது இரக்கம் காட்டுங்கள் என்று அழுது புலம்பியுள்ளார்.
உடனே என் புகாரின் மீது 147,427, 294 (B) 506 (1) என்ற பிரிவுகளில் FIR பதிவு
செய்யப்பட்டது. அதன் Crime No 173/2023 ஆகும். மேலும் பர்வீன் கூறுகையில்
நான் எங்கள் வீட்டின் சுவரில் ஒரு பேனர் வைத்திருந்தேன். அதில் இந்த சொத்து சம்பந்தமாக வழக்கு நிலுவையில் உள்ளது.
என்றும் வழக்கு முடியும்
வரை சொத்திற்குள் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது என்றும் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. என்றும் எழுதியிருந்தேன். இதை தெரிந்த ராஜாவின் மனைவி கற்பகம் அவருடன் துணையாக மேலும் பலரும் எங்கள் இடத்திற்குள் வந்து இந்த பேனரை கிழிக்க வேண்டும் இல்லையென்றால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.
என்னை ஒரு மைனர் பெண் என்றும் பாராமல் அசிங்கமான அருவருப்பான வார்த்தைகளால் திட்டி அடிக்க வந்தார்கள். உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வந்து தடுத்து என்னை காப்பாற்றினார்கள்.
மேலும் மேற்குறிய கற்பகம், இன்று இரவிற்குள் இந்த பேனரை கிழித்து விடுவோம் என சவால் விட்டு சென்றார். அதே போல் அன்று இரவு 10.38 மணிக்கு கஜா என்கின்ற கஜேந்திரன் த/பெ முருகேசன் என்பவரின் மூலம் எங்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அந்த பேனரை கிழித்து எடுத்து சென்று விட்டனர். அதன் cctv பதிவு என்னிடம் உள்ளது.
மேலும் எங்கள் வீட்டின் அருகில் நாங்கள் குளிப்பதற்கு தனியாக ஒரு பாத் ரூம் கட்டியிருந்தோம் அதில் குளித்துவிட்டு நடந்து வந்து தான் வீட்டிற்கு வருவோம். இந்நிலையில் தொடர்ச்சியாக மேற்குறிய ராஜா அவர்கள் நாங்கள் குளித்துவிட்டு வரும்போது சாலையில் நின்று எங்களை செல் போனில் போட்டோ எடுப்பார். அவர் அவ்வாறு செய்வதை எங்களால் தடுக்க முடியவில்லை.
அவ்வாறு போட்டோ எடுக்கும் போது நான் என்னுடைய செல் போனில் அதை வீடியோ எடுத்து வைத்துள்ளேன். இந்நிலையில் நாங்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் எங்களுக்கு ஆதரவாக உத்திரவு பெற்ற காரணத்தால் கோபமடைந்த ராஜா மகன் அஜித், அருண், சிவகுமார், மற்றும் ராஜாவின் மனைவி கற்பகம், ராஜாவின் அண்ணன் மகன் பரணி, ஸ்ரீதர், பிரேம் மற்றும் அவர்களின் மனைவி 10க்கும் மேற்பட்ட பெயர் தெரியாத அடையாளம் தெரிந்த அடியாட்கள் ஆகியோர் இன்று (19.5.2023) சுமார் 11 மணியளவில்.
கத்தி, மற்றும் அரிவாளுடன் எங்கள் வீட்டிற்குள் புகுந்து இன்னும் இந்த வீட்டை விட்டு வெளியேற மாட்டிங்களா என்று கூறி என் கன்னத்தில் ஓங்கி அடித்து இப்போதே உங்கள் அனைவரையும் தீ வைத்து கொளுத்தி விடுகின்றேன் என்று ஆவேசமாக கூறினான். அதை கண்ட என் அம்மாவும், பாட்டியும் என்னை காப்பாற்ற முயற்சி செய்தார்கள்.
அப்போது ராஜாவின் மகன் ஒரு கட்டையை வைத்து என் அம்மாவையும் பாட்டியையும் ஓங்கி அடித்தான். அப்போது என்
அம்மாவின் மூக்கு உடைந்து மூச்சு பேச்சு இன்றி கீழே விழுந்தார். மேலும் அவர்களுடன் வந்த பெண்கள் எங்களை விளக்குமாறுகளை கொண்டு அடித்தார்கள்.
உடனே நான் எழுந்து என் பாட்டியை தூக்க முயன்ற போது ராஜா என்பவன் அவனுடைய மகன் என் உடம்பில் நகங்களை வைத்து கீறினான். அதற்கு இப்போது என் உடம்பில் உள்ள காயங்களே சாட்சியாகும்.
மேலும் நாங்கள் அடிவாங்கிய போட்டோக்களையும் இத்துடன் இணைத்துள்ளேன். மேலும் என்னுடைய 20 ஆயிரம் மதிப்புள்ள கைபேசி மற்றும் என் அம்மாவின் 20 மதிப்புள்ள கைபேசி ஆகியவற்றையும் பிடுங்கி கொண்டார்கள். உடனே அருகில் உள்ளவர்கள் கூட்டம் கூடவே வந்தவர்கள் அனைவரும் ஓடிவிட்டனர்.
பிறகு நான் 108க்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வர வழைத்து அரசு மருத்துவமனையில் நாங்கள் அனைவரும் அனுமதிக்க பட்டோம். மேலும் மைனர் பெண் என்றும் பாராமல், என் அம்மாவையும்.
பாட்டியையும் ஒரு பெண் என்றும் பாராமல், எங்களுக்கு ஆதரவாக உயர்நீதி மன்ற தீர்ப்புகள் இருந்தும், ஏற்கனேவே அவர்கள் மீது FIR பதிவு செய்ய பட்டிருந்தும், துளியும் பயமில்லாமல், முன் ஜாமீனும் எடுக்காமல் மீண்டும் மீண்டும் எங்களை கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து எங்களுடைய 2 செல் போனை பறித்த ராஜா, அவருடைய மகன் அஜித், அருண், சிவகுமார்.
மற்றும் ராஜாவின் மனைவி கற்பகம், ராஜாவின் அண்ணன் மகன் பரணி, ஸ்ரீதர், பிரேம் மற்றும் மனைவிகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட பெயர் தெரியாத அடையாளம் தெரிந்த அடியாட்கள் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பர்வீன் கேட்டுக் கொண்டுள்ளார்.