யாழில் 12 வயது சிறுவனுக்கு தாயாரின் கணவர் செய்த கொடூரம்!

யாழ்ப்பாணம் 12 வயதுச் சிறுவன் ஒருவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெருப்பால் சூடுவைத்து சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்டம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன் ஒருவனே இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.
சிறுவனின் தாயின் கணவர் நெருப்பால் சுட்டதில் சிறுவனுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
கை, முகம் எனப் பல இடங்களிலும் காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு தீக் காயத்திற்கு இலக்கான சிறுவன் நேற்றைய தினம் பாடசாலைக்குச் சென்றுள்ளார்.
அதனை அவதானித்த ஆசிரியர்கள் சிறுவனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்று சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
(Visited 16 times, 1 visits today)