விளையாட்டு

முன்னாள் வீரரின் சாதனையை முறியடித்த மேக்ஸ்வெல்

நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 72 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 1 சிக்சர் அடித்தார்.

இந்த சிக்ஸ் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்சர் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதற்கு முன் இந்த சாதனை பட்டியலில் ஆரோன் பின்ச் 125 சிக்ஸ் அடித்து முதல் இடத்தில் இருந்தார். தற்போது 126 சிக்சர்களுடன் மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்த பட்டியலில் டேவிட் வார்னர், 113 சிக்சர்களுடன் 3வது இடத்திலும், வாட்சன் 83 சிக்சர்களுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ