ஸ்பெயின் தீ விபத்து – உயிரிழப்பு 10ஆக உயர்வு
ஸ்பெயினின் மூன்றாவது பெரிய நகரமான வலென்சியாவின் வசதியான மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலத்த காற்றினால் ஏற்பட்ட தீ, அரை மணி நேரத்திற்குள் முற்றிலும் சூழ்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
ஆரம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக இருந்த போதிலும் தீ பரவல் அதிகரிப்பால் பாலி எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
முகமூடிகள் மற்றும் ஆக்ஸிஜன் தொட்டிகளுடன் தீயணைப்பு வீரர்கள் எரிந்த கட்டிடத்தின் வழியாக உடல்கள் அல்லது உயிர் பிழைத்தவர்களைத் தேடினர். வலென்சியா மேயர் மரியா ஜோஸ் கடாலா, காணாமல் போனவர்கள் யாரும் இல்லை என்று கூறினார்.
“முதல் காட்சி ஆய்வில், கட்டிடத்தில் 10 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன,” என்று வலென்சியா பிராந்தியத்திற்கான மத்திய அரசின் பிரதிநிதி பிலார் பெர்னாபே செய்தியாளர்களிடம் கூறினார்.
இரண்டு தீயணைப்பு வீரர்கள் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தீ விபத்தில் தங்கள் உடமைகள் அனைத்தையும் இழந்து, தற்போது தற்காலிகமாக அருகிலுள்ள ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள உயிர் பிழைத்த குடியிருப்பாளர்களுக்கு உடைகள், மருந்துகள் மற்றும் பொம்மைகளை நன்கொடையாக வழங்க வலென்சியர்கள் குவிந்தனர்.
வலென்சியாவின் மேயர், 105 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், தினசரி செலவுகள் மற்றும் வாடகைக்கு பணம் பெறுவதாக பிராந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.