ChatGPT பயனாளர்களுக்கு அதிர்ச்சி – பிழையான பதில் கிடைப்பதால் குழப்பம்
ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது ‘கேட்ட கேள்விக்குப் பதில் கிடைக்கும்’ என்ற நம்பிக்கை பலருக்கு…
தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாற்றால் பலருக்கு அர்த்தமில்லாத பதில்கள் மட்டுமே கிடைத்தன.
வழக்கத்தில் இல்லாத வார்த்தைகள்..முழுமை அடையாத வாக்கியங்கள் போன்றவை பதிலாக வழங்கப்பட்டன.
பிரச்சினை சுமார் 16 மணி நேரம் நீடித்தது… ‘ChatGPTக்குப் பேய் பிடித்தவிட்டது போல இருந்தது’ என்று மென்பொருள் நிபுணர்கள் சிலர் கூறினர்.
கோளாற்றைச் சீர்செய்த பிறகே ChatGPT வழக்கநிலைக்குத் திரும்பியது.
OpenAI நிறுவனம் தொழில்நுட்பத்தைக் கடந்த ஆண்டு (2023) அறிமுகம் செய்தது.
சுமார் 10 மாதங்களில் அதன் மதிப்பு மும்மடங்காகியுள்ளதாக நம்பப்படுகிறது.
அதன் மதிப்பு 80 பில்லியன் டாலரை எட்டிவிட்டதாக The New York Times செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.