கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து பெண் பலி

பம்பலப்பிட்டி, மிலாகிரிய அவென்யூ, Asian Court அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏழாவது மாடியில் இருந்து வீழ்ந்து வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்த வீட்டுத் தொகுதியில் வசித்து வந்த 74 வயதுடைய ஜெயானந்தன் வேலு அம்மா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 26 times, 1 visits today)