பிலிப்பைன்ஸ் நாட்டை உலுக்கிய விபத்து – 15 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளத்தில் டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
நீக்ரோஸ் தீவில் நடந்து வரும் கால்நடைச் சந்தைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற டிரக், வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
சுமார் 160 அடி பள்ளத்தில் விழுந்த டிரக்கில் ஓட்டுநரும், ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்த நிலையில் ஏனையோர் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 14 times, 1 visits today)