ஜெர்மனியில் வெளிநாட்டவர்களால் நெருக்கடி – பாடசாலைகளில் ஆபத்தான நிலைமை
ஜெர்மனியில் வெளிநாட்டவர்கள் கல்வி கற்கின்ற பாடசாலைகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனியில் உள்ள சில பாடசாலைகளில் குறிப்பாக வெளிநாட்டவர்களை பூர்வீகமாக கொண்ட மாணவர்கள் கல்வி கற்கின்ற பாடசாலைகளில் வன்முறைகள் நிகழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக கானோவரில் உள்ள பாடசாலை ஒன்றில் 900 மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும்,
இந்நிலையில் இந்த பாடசாலையில் கற்கின்ற மாணவர்கள் தம்மிடம் ஆயுதங்களை எடுத்து வருவதாகவும் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களுக்கு எதிராக இவர்கள் வன்முறைகளை பிரோகிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதன் காரணத்தினால் இந்த பாடசாலையில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களை கடமையில் ஈடுப்படுத்த வேண்டும் என்று இந்த பாடசாலையில் கல்வி கற்கின்ற ஆசிரியர்கள் மற்றும் சமூக உதவியாளர்கள் அந்த மாநில அரசாங்கத்திடம் வேண்டுதலை விடுத்துள்ளதாகவும், இந்நிலையில் இந்த மாநில அரசாங்கமானது இந்த வன்முறைகளை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் சமூக உதவியாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதாவது மாணவர்கள் ஆயுதங்கள், கத்திகள் மற்றும் பொது கழிவறைகளிலும் மாணவர்களுக்கு இடையுறுகளை ஏற்படுத்தவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.