இந்தியாவில் பாரிய போராட்டத்தை மேற்கொள்ளும் விவசாயிகள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
மத்திய அரசு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, போராட்டத்தை நடத்தி வந்த இந்திய விவசாயிகள் மீண்டும் தங்கள் போராட்டத்தை தொடங்கினர்.
தலைநகர் டெல்லியை அடைவதே அவர்களின் நோக்கம்.
விளைபொருட்களுக்கு நிலையான விலை வழங்க வேண்டும் என்று கூறும் விவசாயிகள், போராட்டம் தீவிரமடையும் என எச்சரித்துள்ளனர்.
விவசாயிகள் வருகையை தடுக்கும் வகையில் டெல்லி செல்லும் சாலைகளில் முள்கம்பிகள் மற்றும் பிற தடுப்பு வேலிகள் போடப்பட்டதாக தகவல் வெளியானது.
ஆனால், தடைகளைத் தாண்டிச் செல்லும் வலிமை தங்களுக்கு இருப்பதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
சில போராட்டக்காரர்கள் புல்டோசர்கள் மற்றும் பெரிய டிராக்டர்களை போராட்டத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
குறிப்பாக ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில், விவசாயிகள் தடுப்புகளை உடைத்து முன்னேறியபோது, அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.