கனடாவின் வருடாந்த பணவீக்கம் கடுமையான வீழ்ச்சி – குறையும் பொருட்களின் விலை
கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் ஜனவரி மாதத்தில் எதிர்பார்த்ததை விட 2.9 சதவீதமாக குறைந்துள்ளது.
அத்துடன் முக்கிய விலை நடவடிக்கைகளும் தளர்த்தப்பட்டதாக செவ்வாயன்று வெளியாகிய தரவுகள் காட்டியது.
பணவீக்க குறைப்பானது ஆரம்ப வட்டி விகிதக் குறைப்புக்கான அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏழு மாதங்களில் பணவீக்கம் 3 சதவீதத்துக்கும் கீழே சரிந்தது இதுவே முதல் முறையாகும்.
உணவு உட்பட நுகர்வோர் விலைக் குறியீட்டின் எட்டு பொருட்களில் ஐந்து பொருட்களின் விலை அதிகரிப்பானது குறைவடைந்துள்ளது.
அத்துடன் கடந்த டிசம்பர் மாதத்தில் 4.7 சதவீதமாக இருந்த பலசரக்கு பொருட்களின் விலைகள் ஆண்டுதோறும் ஜனவரி மாதமளவில் 3.4 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த மே மாதம் 2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக ஜனவரி மாதத்தில் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.