அதிகரிக்கும் இணைய அச்சுறுத்தல்கள்: இந்தியாவிற்கு கிடைத்த இடம்
2023ல் 34 சதவிகித இந்திய பயனர்கள் இணைய அச்சுறுத்தலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் இணைய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தனியுரிமை அளிக்கும் முன்னணி நிறுவனமான காஸ்பர்ஸ்கி வெளியிட்ட குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நிறுவனத்தின் பாதுகாப்பு செயலி 7.43 கோடி தீங்கிழைக்கும் நிகழ்வுகளைத் தடுத்ததாக தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வுகள், நேரடியாக பயனர்களின் கணினி, அலைபேசி, மெமரி கார்டு, ஹார்ட் டிரைவ் போன்றவற்றில் ஊடுருவியவை. மறைகுறியாக்கப்பட்ட (என்கிரிப்டட்) கோப்புகளும் இதில் அடக்கம்.
மேலும் உலகளவில் இணைய அச்சுறுத்தல் பட்டியலில் இந்தியா 80-வது இடத்தில் உள்ளதாக காஸ்பர்ஸ்கி குறிப்பிட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)





