வடகொரிய அதிபருக்கு சொகுசு காரை பரிசளித்த புட்டின்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு சொகுசு காரை அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய தயாரிப்பு வாகனம் கிடைத்ததாக வடகொரியா தெரிவித்தது.
இந்த கார், புடின் பயன்படுத்திய லிமோசின் கார் போன்றது என்றும், இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை வளர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





