ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக உர்சுலா வோன்டர்லயன் மீண்டும் தெரிவாக வாய்ப்பு!
ஜேர்மனியின் Ursula von der Leyen, ஐரோப்பிய ஒன்றியத்தின் சக்திவாய்ந்த ஆணையத்தின் தலைவராக இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
இந்த தெரிவானது தலைமுறையில் 450 மில்லியன் குடிமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மிக முக்கியமான அரசியல்வாதியாக மாற்றுவார் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் முதல் இரண்டு வருட யுத்தம் உட்பட பல நெருக்கடிகளின் மூலம் 27 நாடுகளைக் கொண்ட குழுவை வழிநடத்திய அவர் தற்போது மீண்டும் ஒருமுறை போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





