அவுஸ்திரேலியாவால் சேதமடைந்துள்ள ஓசோன் துளை- ஆய்வில் கண்டுபிடிப்பு!
தென்கிழக்கு அவுஸ்திரேலியாவில் பரவிய மிக மோசமான காட்டுத்தீயானது ஓசோன் படலத்தை கடுமையாக சேதப்படுத்தியுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2019-20ம் ஆண்டில் நடந்த இச்சம்பவத்தில், ஓசோன் துளையை பாதிக்கக்கூடிய ரசாயனங்கள் வெளியேறியதாக தெரியவந்துள்ளது. மட்டுமின்றி இப்படியான காட்டுத்தீயில் இருந்து வெளியேறும் புகை மூட்டமானது, சூரியனின் புற ஊதா கதிர்வீச்சுகளில் இருந்து பூமியை பாதுகாக்கும் அமைப்பை சேதப்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அவுஸ்திரேலொயாவில் ஏற்பட்ட அந்த மோசமான காட்டுத்தீக்கு 36 பேர்கள் கொல்லப்பட்டதுடன், சுமார் 3 பில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். குறித்த காட்டுத்தீயானது மில்லியன் கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரவியதுடன் ஒரு மில்லியன் டன் புகையை வளிமண்டலத்தில் வெளியேற்றியது.
மட்டுமின்றி, இதனால் ஏற்பட்ட புகையானது 30 கி.மீற்றர் உயரத்துக்கு எழுந்தது. துரதிர்ஷ்டவசமாக இந்த பகுதியில் தான் ஓசோன் படலமும் அமைந்துள்ளது.இந்த நிலையில், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளின் மேலே காணப்படும் ஓசோன் படலத்தின் மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை சேதமாகியுள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் விஞ்ஞானிகள் அளித்த விளக்கம், ஹைட்ரோகுளோரிக் அமிலம், புகை துகள்களுடன் சேர்ந்து, மூலக்கூறு குளோரைனை உருவாக்கியது, இது ஓசோன் படலத்தை சேதப்படுத்தும் மிகவும் எதிர்வினையாற்றக்கூடிய குளோரின் அணுக்களாக உருமாறியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.