இலங்கை கடற்பகுதியை பாதுகாக்கும் அமெரிக்காவின் விசேட விமானம்!
இலங்கைக்கு விமானமொன்றை வழங்குவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
கடற்பகுதியின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இந்த விசேட விமானம் வழங்கப்படவுள்ளது.
இந்தோ – பசிபிக் மூலோபாயம் குறித்து அமெரிக்க அமைதி நிறுவகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ இதனை அறிவித்துள்ளார்.
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நோக்கில், இலங்கையின் கரையோரக் கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இந்த வருடம் அமெரிக்க அரசாங்கம் பீச்கிராப்ட் கிங் ஏர் விமானத்தை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்க உதவுவது அமெரிக்கா உட்பட பிற நாடுகளுக்குத் தேவையாகவுள்ளதாகவும் டொனால்ட் லூ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் இலங்கையானது ஒரு வரலாற்று பொருளாதார மீட்சியை பெற்றுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சிறிய உதவியால் இலங்கையினால் இந்த தடையை தாண்டுவதற்கு முடிந்ததாகவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.