மரத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் செயற்கைக்கோளை உருவாக்கிய ஜப்பான்
மரத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் செயற்கைக்கோளை ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
LignoSat என்கிற அந்த செயற்கைக்கோளை மெக்னோலியா (magnolia) வகை மரத்தால் செய்யப்பட்டது.
அது எளிதில் தெறிக்காத மர வகை பயன்படுத்தப்பட்டுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
இந்த ஆண்டு கோடைக்காலத்தில் அது அமெரிக்க விண்வெளியில் பாய்ச்சப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலோகத்தால் செய்யப்படும் செயற்கைக்கோளால் விண்வெளியில் குப்பைகள் அதிகரித்துவிட்டன.
அதனால் மரம் போன்ற எளிதில் மக்கக்கூடிய பொருள்களால் செயற்கைக்கோளை செய்ய முயற்சி செய்வதாக ஜப்பானிய விண்வெளி வீரர் ஒருவர் கூறினார்.
சரியான மர வகையைத் தேர்ந்தெடுக்கப் பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டதாக The Guardian குறிப்பிட்டது. மெக்னோலியா வகை மரமே ஆக வலுவானதாக இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
அதைக் கொண்டு செய்யப்பட்ட செயற்கைக்கோள், ஒரு காப்பிக் குவளையின் அளவு தானாகும்.
அது சுமார் 6 மாதங்களுக்கு விண்வெளியில் செயல்படும் என்று நம்பப்படுகிறது.