இலங்கை செய்தி

இலங்கையில் ஒரே படுக்கையில் 2 கைதிகள் சிகிச்சைக்காக தங்கும் அவல நிலை!

இலங்கையின் ஒரே படுக்கையில் 2 கைதிகள் சிகிச்சைக்காக தங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சிறைச்சாலை மருத்துவமனையின் தற்போதைய கொள்ளளவு முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிறைச்சாலை மருத்துவனையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 350 ஆக உள்ளது.

வழமையான கொள்ளளவான 185 கைதிகள் என்ற அளவை விட அதிகமானது என்று சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறை மருத்துவமனையில் நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும் மருத்துவமனையின் கொள்ளளவை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், நோயாளிகள் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால், மட்டுமே நெரிசல் குறையும் எனவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இடப்பற்றாக்குறை காரணமாக சிறை மருத்துவமனையில் ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளை தங்க வைக்கும் அவல நிலை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 35 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!