பாலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிக்குமா பிரான்ஸ்? : மக்ரோன் வெளியிட்ட அறிவிப்பு!
பாலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிப்பதில் பிரான்ஸுக்குத் தடையில்லை என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.
ஜோர்டான் மன்னர் அப்துல்லாவுடன் பாரிஸில் நடைபெற்ற கூட்டத்தில் மக்ரோன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பாலஸ்தீனிய அரசை பிரான்ஸ் எப்போது, எந்த சூழ்நிலையில் அங்கீகரிக்க முடியும் என்பதை மக்ரோன் விவரிக்கவில்லை.
மேலும் பிரான்ஸ் ஒருதலைப்பட்சமாக அத்தகைய முடிவை எடுக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் நீண்ட காலமாக மத்திய கிழக்கில் இரு-மாநில தீர்வை ஆதரித்துள்ளன. இவை பேச்சுவார்த்தை மூலமே சாத்தியப்பட்டது.
ஆனால் தற்போது நீண்டகாலமாக பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ளன. இந்நிலையில் இஸ்ரேல் – ஹமாஸுக்கு இடையில் போர் இடம்பெற்று வருகிறது.
போர் நிறுத்த நடவடிக்கைகள் பலனளிக்காத நிலையில், சில ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன அரசை விரைவில் அங்கீகரிப்பதற்காக குரல் கொடுத்து வருகின்றன.