இலங்கை வருகிறார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்!

முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர். வர்மா இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆசிய நாடுகளுக்கான விஜயத்தின் போது அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி நாளை முதல் 23ம் திகதிவரை இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு செல்ல அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலாளர் ரிச்சர்ட் ஆர்.வர்மா திட்டமிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் மாலைதீவுக்கான விஜயங்களை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பவுள்ள அவர், அரச உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தையும் பிரதி அரச செயலாளர் பார்வையிட உள்ளார்.
(Visited 12 times, 1 visits today)