பெருவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
மத்திய பெருவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பெருவின் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 57 கிலோமீட்டர் (35 மைல்) ஆழத்தில் ஹுரால் நகரத்தில் மையம் கொண்டிருந்ததாக அந்த நிறுவனம் கூறியது.
உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகில் அதிக நிலநடுக்க இயக்கங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றான பெரு, பசிபிக் பூகம்ப மண்டலத்தில் அமைந்துள்ளது, இது “நெருப்பு வளையம்” என்றும் அழைக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 15, 2007 அன்று 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் பெருவில் குறைந்தது 595 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 1 visits today)