அமெரிக்காவில் ஒரு மில்லியன் மக்கள் கலந்து கொண்ட பேரணியில் துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 20-ஐ தாண்டியுள்ளது.
அவர்களில் 11 குழந்தைகள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் சூப்பர் பவுல் என்ற புகழ்பெற்ற பேரணி நடைபெற்றது.
சூப்பர் பவுல் என்பது யுனைடெட் ஸ்டேட்ஸ் நேஷனல் கால்பந்து லீக்கின் வருடாந்திர லீக் சாம்பியன்ஷிப் விளையாட்டு ஆகும்.
அதன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் கலந்துகொண்டனர்.
பேரணி நடந்து கொண்டிருந்த போது அத்துமீறி நுழைந்த நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.