அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கி சூடு – 20 இற்கும் மேற்பட்டோருக்கு காயம்
அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தில் இடம்பெற்ற அணிவகுப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
அத்துடன், 20 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கி சூடு நடத்திய மூன்று சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காயமடைந்தவர்களில் 11 சிறுவர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், இந்த வருடத்தின் கடந்த ஆறு வாரங்களில் மாத்திரம் அமெரிக்காவில் 44 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.





