ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் அமுலுக்கு வரும் புதிய சட்டம்

ஐரோப்பிய நாடுகளில் ஒரு பொருளின் சட்டப்பூர்வ உத்தரவாதக் காலம் முடிவடைந்த பின்னரும் நுகர்வோர் பழுதுபார்ப்பதற்கு உரிமையுடைய ஒரு சட்டமூலத்தை அறிமுகப்படுத்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் திட்டமிட்டுள்ளது.

மேலும் அவர்கள் இலவசமாகப் பழுதுபார்ப்பதற்கு உரிமையுள்ள பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மற்றும் ஆணைகுழுவின் புதிய “பழுதுபார்க்கும் உரிமை” சட்டத்தில் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது.

இது கழிவுகளை குறைக்கவும், பழுதுபார்க்கும் துறையை மேம்படுத்தவும் நுகர்வோருக்கு அதிக உரிமைகளை வழங்குவதன் மூலம் பழுதடைந்த பொருட்களை சரிசெய்வதற்கும் உதவும் என நம்பப்படுகிறது.

சட்டம் அமுல்படுத்தப்பட்டால் தயாரிப்புகளை சரிசெய்யும் செயல்முறை எளிமைப்படுத்தப்பட வேண்டும்.

உற்பத்தியாளர்கள் பழுதுபார்க்க வேண்டிய ஆடை சலவை இயந்திரங்கள், வெக்யூம் கிளீனர்கள் மற்றும் கையடக்க தொலைபேசி போன்ற வீட்டுப் பொருட்களின் பட்டியல் நீட்டிக்கப்படும் மற்றும் உற்பத்தியாளர்கள் பழுதடைந்த பொருட்களை சரிசெய்ய வாடிக்கையாளர்களுக்கு உதவ வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்