பேருவளை – கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட துறைமுக காவலாளி!
பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி துறைமுகத்தில் காவலாளியாக பணியாற்றிய ஒருவரே இவ்வாறு கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் நேற்று (13) இரவு வேலைக்காக வந்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.மக்கொன பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 17 times, 1 visits today)





