கனடாவில் மாணவர்களின் ஓவியங்களைச் சொந்த இணையத்தளத்தில் விற்ற ஆசிரியருக்கு நேர்ந்த கதி
கனடாவில் மாணவர்கள் வரைந்த ஓவியங்களைத் தமது சொந்த இணையத்தளத்தில் விற்றுவந்ததாகச் சந்தேகிக்கப்படும் கனடிய ஆசிரியர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் குறித்த ஆசிரியர் தனது பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவர் இதுவரை சுமார் 100 ஓவியங்களைத் தமது இணையத்தளத்தில் விற்பனைக்கு விட்டுள்ளார்.
ஆசிரியரின் இந்த செயலால் உண்மையான தங்கள் உழைப்பில் படம் வரை மாணவர்களின் பெற்றோர் கடும் கோபமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் ஆசிரியரின் இணையத்தளத்தைப் பார்த்த மாணவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
அவர் விற்பனைக்கு விட்டுள்ள ஓவியங்களில் ஒன்று 94 மொடலர் விலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுவும் மாணவர்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களின் ஓவியங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பிள்ளைகள் ஏமாற்றப்பட்டதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று பாதிக்கப்பட்ட பெற்றோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மேலும் குறித்த ஆசிரியரின் சுயநலப் போக்கை பெற்றோர் கண்டித்த நிலையில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.