நேபாளத்தில் ஒரே பாலின திருமணத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த முதல் ஜோடி
திப்தி என்ற புனைப்பெயர் கொண்ட அஞ்சு தேவி ஸ்ரேஸ்தா மற்றும் 33 வயதான சுப்ரிதா குருங் இருவரும் நேபாளத்தில் அதிகாரப்பூர்வமாக திருமணத்தை பதிவு செய்த முதல் லெஸ்பியன் (ஒரே பாலின திருமணம்) ஜோடியாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர்.
மேற்கு நேபாளத்தில் உள்ள பர்டியா மாவட்டத்தில் வசிக்கும் திருமதி திப்தி மற்றும் சியாங்ஜா மாவட்டத்தில் வசிக்கும் திருமதி குருங் ஆகியோர் பர்டியா மாவட்டத்தின் ஜமுனா கிராமப்புற நகராட்சியில் தங்கள் திருமணத்தை பதிவு செய்தனர்.
வார்டு செயலாளர் தீபக் நேபால் அவர்களுக்கு திருமண சான்றிதழை வழங்கினார் என்று ஓரின சேர்க்கை ஆர்வலரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் பாபு பாண்டா கூறினார்.
தெற்காசியாவில் ஒரு லெஸ்பியன் ஜோடி அதிகாரப்பூர்வமாக தங்கள் திருமணத்திற்காக பதிவு செய்த முதல் வழக்கு இதுவாகும் என்று பந்த் கூறினார்.
தெற்காசியாவில் ஒரே பாலின திருமணத்தை முறையாக பதிவு செய்த முதல் நாடு நேபாளம்.