செலவை கட்டுப்படுத்துவதில் தோல்வியை தழுவிய இலங்கை அரசாங்கம்!
கடந்த வருடம் அரசாங்கத்தின் செலவினம் ஏறக்குறைய 1,300 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள கூறுகிறார்.
அதன்படி கடந்த வருடம் அரசாங்கம் எதிர்பார்த்த செலவினக் கட்டுப்பாடு வெற்றியளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “2023 ஆம் ஆண்டில், அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கவும், செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் முக்கியமாக எதிர்பார்த்தது. 2023 முதல் 11 மாதங்களில் வழங்கப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்யும் போது, அரசாங்கத்தால் முடியவில்லை என்பது தெளிவாகிறது.
இலக்கை அடைய அரசாங்கத்தின் வரி வருமானம் அதிகரித்துள்ளது. இது ஏறக்குறைய 900 பில்லியன் ரூபாவினால் நடந்துள்ளது. ஆனால் செலவினம் கிட்டத்தட்ட 1,300 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.
2022 உடன் ஒப்பிடுகையில் சுமார் 1,300 பில்லியன் ரூபா அதிகரிப்பு. இந்த அதிகரிப்பில், அரசாங்கச் செலவுகள் ஒரு மாதத்தில் ஏறக்குறைய 125 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளன. அரசாங்கச் செலவு கிட்டத்தட்ட 4 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.