இலங்கை மக்களிடம் மருத்துவர் விடுக்கும் கோரிக்கை
இலங்கையில் இந்த நாட்களில் நிலவும் வெப்பத்தை கருத்தில் கொண்டு 3 லீற்றர் நீர் அருந்துமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சிறுவர்கள் ஒன்றரை லீற்றர் நீரை அருந்த வேண்டும் என சர்வதேச சுகாதார பேரவையின் போஷாக்கு பிரிவின் தலைவர் மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேசிக்காய் சாறு, ஓரஞ் மற்றும் தர்பூசணி பானங்கள் அருந்துவது மிகவும் நல்லது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்களில் மிக அதிக வெப்பததை உடல் உணர்கின்றது. இந்த நிலையில், உடலில் உள்ள நீரின் அளவு குறைந்து, உடலில் உள்ள செல்கள் வறட்சியடையும்.
அந்த சூழ்நிலையில், யார் வேண்டுமானாலும் சோர்வாகவும் தூக்கமாகவும் உணரலாம். சிறுநீர் வெளியேறும் அளவும் குறையலாம். அதனால்தான் இந்த நாட்களில் வழக்கத்தை விட அதிகமாக தண்ணீர் குடிப்பது அவசியம். வெயிலில் வேலை செய்பவர்கள் சிறப்பு கவனம் செலுத்துங்கள் என மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார்.